பொருளாதார தடையால் ரஷ்ய நாணயம் வீழ்ச்சி!

உலக நாடுகளின் பொருளாதார தடைகளால் ரஷ்ய செல்வந்தர்கள் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர்.
22 ரஷ்ய கோடீஸ்வரர்கள் ஒரே நாளில் 39 பில்லியன் டொலர் அளவிலான வருவாய் இழப்பை சந்தித்ததாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளால், ரஷ்யா மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள், நிதி நிறுவனங்கள் மீது பல்வேறு தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரஷ்ய பங்குச் சந்தையான மாஸ்கோ எக்ஸ்சேஞ்ச் ஒட்டுமொத்தமாக 33 சதவீத அளவில் வீழ்ச்சி அடைந்து பொருளாதார சரிவுகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு 7 சதவீதம் வீழ்ச்சி அடைந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.