இன்று முதல் இரவு நேர ஊரடங்கு!

அசாம் மாநிலம் முழுவதும் இன்று(டிச.26) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருவதன் மூலம் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்து வருகிறது.

இதற்கிடையில், தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரான் வைரஸ்  தற்போது 23 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதற்கு ‘ஓமிக்ரான்’ என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

இந்த வைரஸ் 50 முறை உருமாற்றம் அடைந்துள்ளதால் இதனின் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இதுவரை வந்த திரிபுகளில் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வைரஸ் போட்ஸ்வானா, ஹாங்காங் மற்றும் இஸ்ரேலிலும்  கண்டறியப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில்,  இது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. அதன்படி,இந்தியா  முழுவதும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக  மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, மத்தியப் பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, உத்தரபிரதேசம் மநிலத்தில் நேற்று(டிச.25) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலத்திலும் இன்று(டிச.26) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேசவ் மஹந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அசாம் மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் யாரும் பாதிக்கவில்லை. இருப்பினும், ஓமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில், இன்று(டிச.26) முதல் இரவு 11:30 முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

மேலும், அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள், ஷோரூம்கள், மளிகைக் கடைகள் இரவு 10:30 மணிக்குள் தங்கள் கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31, 2021 அன்று பொருந்தாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *