ஒரு வாரத்திற்குள் உக்ரைன் வீழ்ந்துவிடும் அமெரிக்கா அச்சம்!

96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் Volodymyr Zelensky கூறியுள்ளார். நேற்று ஒரே நாளில் புடின் படை உக்ரைன் தலைநகரை கிட்டத்தட்ட சுற்றிவளைத்துவிட்டன.

Chernobyl நகரை தாண்டி சில பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இன்னும் குறைந்தது ஓரிரு நாட்களில் தலைநகர் கீவ் (Kyiv) ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என கூறப்படுகிறது.

அதன்படி, ரஷ்ய படையெடுப்பு தொடங்கி 96 மணிநேரங்களில் உக்ரைன் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் கவிழ்ந்துவிடலாம் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா விரைவில் நகரின் மீது குண்டு மழை வீசும் என்று அரசாங்கம் எச்சரித்ததை அடுத்து, கீவில் உள்ள குடிமக்கள் பாதுகாப்பான தங்குமிடங்களை தேடி தஞ்சமடைந்து வருகின்றனர்.

இதற்கிடையில், NATO உறுப்பினரான துருக்கி தனது கப்பல்களில் ஒன்று Odessa அருகே ‘வெடிகுண்டு’ மூலம் தாக்கப்பட்டதாகக் கூறியது. இச்செயல், ஐரோப்பா முழுவதும் போரைத் தூண்டிவிடும் என்ற அச்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *