பெண்மையை புகழடைய செய்த நாசா புகழ் “சுவாதி மோகன்”

செவ்வாய்க் கிரகத்தில் உயிர்கள் உண்டா என்பதை கண்டறிவதற்காக செவ்வாய்க் கிரகத்தில் தரைக்கலம் ஒன்றை தரையிறக்கும் நாசாவின் முயற்சியில் “விண்கலத்தை நெறிப்படுத்தி தரையிறக்கும்” பொறுப்பை தலைமையேற்றி நடாத்தியவர் “சுவாதி மோகன்”

Mars 2020 Perseverance Project ல் எட்டு வருடங்களாக கடுமையாக உழைத்து இந்த வெற்றியை பெற்றுள்ளனர் சுவாதியின் குழுவினர். இதில் தலைமை ஏற்று நடத்திய சுவாதியின் குரல் Rover செவ்வாய் கிரகத்தில் இறங்கிய போது அந்த வரலாற்று நிகழ்வை “Touch down confirmed ! Perseverance is safely on the surface of Mars ” என்ற போது உலகமே கை தட்டி மகிழ்ந்தது சுவாதியின் குழுவினருடன்

Dr.சுவாதி மோகனின் பெற்றோர் அவர் ஒரு வயது குழந்தையாக இருந்த போது இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தனர். Mechanical and Aerospace engineering பட்டம் பெற்ற சுவாதி Aeronautics and Astronautics ல் டாக்டரேட் பண்ணியுள்ளார்

ஆணுக்கு பெண் சமம் என்பதை காட்ட “மது அருந்துதல், புகை பிடித்தல், பலதரப்பட்ட திருமணம், என பெண்மையை தொலைத்து ஆணாக மாறிய பெண்களுக்கு மத்தியில், பெண்மையை புகழடைய செய்துள்ளார் “சுவாதி மோகன்” …

உலகத்தவர் மத்தியில் பணிபுரியும் பொழுதும் நாகரீகம் என்ற பெயரில் தன்னுடைய அடையாளங்களை தொலைத்துவிடாமல், பொட்டுடன் வலம்வரும் “சுவாதி மோகன்” பெறுமதிப்புக்குறியவராகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *