கொரோனா பாதிப்பு 19 சதவீதம் குறைந்தது உலக சுகாதார அமைப்பு தகவல்!

உலகளவில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிந்த ஒரு வார காலத்துக்கான கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்…

* கடந்த வாரத்தில் உலகமெங்கும் 1 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 75 ஆயிரம் பேர் தொற்றுக்கு பலியாகி உள்னனர். உலகளவில் ஒரு வார கால தொற்று பாதிப்பு 19 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இறப்புகள் நிலையாக உள்ளன.

* ஆஸ்திரேலியா, கம்போடியா, சீனா, பிஜி, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், தென்கொரியா உள்ளிட்ட 37 நாடுகளைக் கொண்ட மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் தொற்று பாதிப்பு 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

* தென்கிழக்கு ஆசியாவில் 37 சதவீதம் சரிவு அடைந்துள்ளது. உலகளவில் இது மிகப்பெரும் சரிவு ஆகும்.

* மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா இறப்பு 38 சதவீதம் அதிகரித்துள்ளது.

* புதிய பாதிப்புகள் அதிகளவில் ரஷியாவில் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் பாதிப்புகள் சமீப வாரங்களில் இரு மடங்கு ஆகி உள்ளது. இது ஒமிக்ரான் வைரசால் வந்த வினை ஆகும்.

* ஆல்பா, பீட்டா, டெல்டா உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து வீழ்ந்துள்ளது. ஒமிக்ரான் தொற்று அவற்றை வெளியேற்றி உள்ளன.

* ஒரு வாரத்தில் 4 லட்சம் மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனைகள் பதிவாகி உள்ளன. இதில் 98 சதவீதத்துக்கும் கூடுதல் ஒமிக்ரான் பாதிப்புதான் என கண்டறியப்பட்டது.

* ஒமிக்ரானின் பி.ஏ.2 வகை நிலையாக அதிகரித்து வருகிறது. தென் ஆப்பிரிக்கா, டென்மார்க், இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில் எழுச்சி பெறுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *