பொறுப்புகளை மறந்துவிட்டு உரிமைகளைப் பற்றி பேசுவது பொருத்தமில்லை!

சவால்களை எதிர்கொண்டு தலைமைத்துவத்தை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) விசேட விளக்கத்தை மேற்கொண்டார்.

74வது தேசிய சுதந்திர தின விழாவில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

74வது தேசிய சுதந்திர தின விழா நிகழ்வுகள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

“சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாட்டின் குடிமக்கள் என்ற வகையில், நம் அனைவருக்கும் உரிமைகளும் பொறுப்புகளும் உள்ளன. பொறுப்புகளை மறந்துவிட்டு உரிமைகளைப் பற்றி மட்டும் பேசுவது பொருத்தமானதல்ல.” “ஒரு நாட்டை ஒழுங்காக நடத்துவதற்கு நாட்டிலுள்ள அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்க முடியாது என்பதை நாம் அறிவோம். மாற முடியாதவர்களை நினைத்து நாம் கைவிடத் தயாராக இல்லை. எதிர்காலத்தைப் பற்றிய நேர்மறையான கண்ணோட்டம் மட்டுமே நம்மை முன்னோக்கி நகர்த்த முடியும். “விமர்சனம் செய்வதை மட்டுமே பழக்கப்படுத்தியவர்களுக்கு எதிர்காலம் பற்றிய பார்வை இல்லை. சில சந்தர்ப்பங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகள் எங்களுக்கு எதிராக ஒழுங்கமைக்கப்படுகிறது. “பிரச்சினைகளில் இருந்து தப்பித்து ஓட வேண்டும் என்று ஒரு தலைவரை மக்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். நாடு எதிர்கொள்ளும் எந்த சவாலையும் சமாளிக்கும் தலைமையை வழங்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். ஒளிமயமான எதிர்காலத்தை கனவு காண்பவர்களால் மாத்திரமே உலக மாற்றமடையும். “மற்றவர்களை மனதளவில் இழிவுபடுத்தும் எவரும் இந்த நேரத்தில் சமுதாயத்திற்கு செய்வது நன்மையல்ல. நாட்டில் நேர்மறையான சிந்தனை கட்டியெழுப்பப்பட வேண்டும்.” பாடசாலை படிப்பை முடிக்கும் ஒவ்வொரு குழந்தையும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய கைவினைப்பொருளில் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும்.” “வியர்வை சிந்தி உழைக்கும் மக்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு தீவிர பங்களிப்பை வழங்குகிறார்கள்.” “வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் எமக்கு பெரும் சொத்தாக உள்ளனர். தேவைப்படும் போது அவர்கள் நாட்டுக்காக முன்வந்தனர்.” “வெளிநாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களையும் தங்கள் தாயகத்தில் முதலீடு செய்ய அழைக்கிறேன்.” “இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தன்னிச்சையாக செயல்படுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுங்கள்.” “நான் கொடுத்த வாக்குறுதி எப்போதும் காப்பாற்றப்படும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.” எக்காரணம் கொண்டும் இந்த நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம். “எனது எஞ்சிய பதவிக் காலத்தில், நிலையான வளர்ச்சிக்கான எனது அனைத்து இலக்குகளையும் நான் நிர்ணயித்துள்ளேன். மிகவும் கடினமான நேரத்தில் நான் நாட்டைக் பொறுப்பேற்க வேண்டியிருந்தது.”

இதேவேளை, நாட்டுக்கு முன்னுதாரணமாக செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அவ்வாறானதொரு முன்னுதாரணத்தை அவர்கள் காட்டினால் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அதனை பின்பற்றுவார்கள் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *