முதுமையை இலகுவாக்க உதவும் மூன்று பழங்கள் ஆய்வில் தெரியவந்த உண்மை!

முதுமை மரியாதைக்குரிய ஒன்றாக கருதப்பட்ட நிலை மாறி, ஒரு சுமையாக மாறிப்போய்விட்ட காலம் இது.

அப்படி முதுமையின்போது மனிதனைப் பாடாய்ப்படுத்தும் நோய்களில் ஒன்று, பார்க்கின்ஸன் நோய் (Parkinson’s disease).

வயதாக ஆக, மூளை செல்கள் உயிரிழக்க, பார்க்கின்ஸன் நோய் மோசமாகி, நோயாளிகள் அன்றாட வாழ்வின் செயல்களைச் செய்யவே தடுமாறவேண்டிய நிலை உருவாகிவிடுகிறது.

தசைகள் நடுங்கத் தொடங்கி, சமயத்தில் இறுகி, வேகமாக தசைகளை அசைப்பதே பிரச்சினையாகிவிடுகிறது. இந்த பிரச்சினையை முழுமையாக சரி செய்ய சிகிச்சை இல்லை என்பது வருந்தத்தக்க விடயம்தான்.

ஆனால், அமெரிக்க ஆய்வாளர்கள் சிலர், இந்த பார்க்கின்ஸன் நோயாளிகளும் நீண்ட நாள் துயரமின்றி வாழ ஒரு வழியைக் கண்டு பிடித்துள்ளார்கள்.

பெனிசில்வேனியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிலர், சுமார் 32 ஆண்டுகளாக, 1,250 பார்க்கின்ஸன் நோயாளிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டுவந்துள்ளார்கள்.

அந்த ஆய்வில், சில பழங்கள், சில பானங்கள் இந்த பார்க்கின்ஸன் நோயாளிகளின் ஆயுளை நீட்டிப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

குறிப்பாக, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள் ஆகிய பழங்களும், தேயிலை, ஆரஞ்சுச் சாறு ஆகிய பானங்களும் இந்த பார்க்கின்ஸன் நோயாளிகளுக்கு பெருமளவில் உதவக்கூடியவை என அவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

காரணம், இவை அனைத்திலுமே, ஏராளம் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் (antioxidants) உள்ளன. இவை வயதாகும்போது உயிரிழக்கக்கூடிய மூளை செல்களை சேதமடைவதிலிருந்து பாதுகாக்கின்றன.

ஆக, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், தேயிலை, ஆரஞ்சுச் சாறு ஆகியவற்றை அருந்தி வருவது, பார்க்கின்ஸன் நோயாளிகளுக்கு நலம் பயக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *