5,000 தொலைபேசிகளை சார்ஜ் செய்யும் பவர் பேங்க் கண்டுபிடிப்பு!

மின்சாரம் இல்லாத நேரத்தில் தொலைபேசியை மின்னேற்றுவதற்கு பவர் பேங்க் எனப்படும் சாதனம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் இவ்வாறான பவர் பேங்க்கள் தற்போது சில ஆயிரம் மில்லியம்பியர் மணிநேரங்களுக்கு (mAh) மட்டும் செயல்படும் திறனைக் கொண்டுள்ளன.

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த  நபர் ஒருவர் 5,000 தொலைபேசிகளை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய 27 மில்லியன் மில்லியம்பியர் போர்ட்டபிள் பவர் பாங்கினைக் கண்டுபிடித்துச்  சாதனை படைத்துள்ளார்.

ஹேண்டி கெங் என்ற யூடியூபரே தனது வெல்டிங் திறன்களை பயன்படுத்தி குறித்த பவர்பாங்கினை உருவாக்கியுள்ளார்.

தனது நண்பர்களிடமும் தன்னை விட பெரிய பவர் பேங்க்கள் இருப்பதைப் பார்த்த பிறகு, இந்த போர்ட்டபிள் பவர் பேங்கை உருவாக்கும் யோசனை வந்ததாக ஹேண்டி கெங் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பவர் பாங்கில்  மின்சார சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான 60 பவர் சொக்கெட்டுகள் காணப்படுவதாகவும்

இதனைப்பயன்படுத்தி தொலைபேசி , ஆடை அலசும இயந்திரம் போன்றவற்றை இயக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதனை வேறு இடங்களுக்கு எடுத்து செல்ல சக்கரங்களுடன் கயிறு  ஒன்று இணைக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *