முகக்கவசம் அணியும் படி கூறிய விமான பணிப்பெண்ணிடம் மர்ம உறுப்பை காட்டிய நபர்!

அமெரிக்காவின் டப்ளின் (Dublin) நகரில் இருந்து நியூயார்க் (New york) செல்கின்ற டெல்டா விமானத்தில் ஐரிஷ் நாட்டின் கால்வே பகுதியை சேர்ந்த ஷேன் மெக்னெர்னி ( Shane Mclnerney) என்ற 29 வயது வாலிபர் பயணம் செய்துள்ளார்.

கால்பந்து அகாடமி ஒன்றில் வேலைக்கு சேர்வதற்காக அவர் ப்ளோரிடா ( Florida) மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார்.

கொரோனா பரவல் காலம் என்பதால் விமான பணிப்பெண் ஷேனிடம் முக கவசத்தை ( Face mask) அணியும்படி பலமுறை கூறியுள்ளார்.
ஆனால், ஷேன் முகக்கவசம் அணிய மறுத்து தகராறு செய்துள்ளார்.

அத்துடன் கூல்டிரிங்ஸ் பாட்டிலை தூக்கி எறிந்து பயணியின் தலையில் அடித்து இருக்கிறார்.

மேலும், உச்சகட்டமாக, தான் அணிந்திருந்த டவுசரை கீழே இறக்கி உள்ளாடைகளை இழுத்துவிட்டு, விமான பணிப்பெண் மற்றும் பயணிகள் முன்னிலையில் மர்ம உ.றுப்பை காட்டி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் பணிப்பெண்கள் புகார் தெரிவித்தனர்.

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியவுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மெக்னெர்னி 20 ஆயிரம் டொலர் பிணை செலுத்தியுள்ளார்.

மேலும், நீதிமன்ற விசாரணையில், இவர் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *