இறந்தவர்களின் உடலில் வைரஸ் 9 நாட்கள் வரை உயிருடன் இருக்கும்!

கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடலில் 9 நாட்கள் வரையில் வைரஸ் உயிருடன் இருக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குஜராத்தில், பார்சி இனத்தவர்கள் இறந்தால் அவர்களை புதைக்கவோ, எரிக்கவோ மாட்டார்கள். 

டவர் ஆப் சைலன்ஸ் எனும் கட்டிடத்தில் இறந்த உடல்கள பிணம் தினும் பறவைகள் விலங்குகளால் சிதைக்கப்படும். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை புதைக்கவோ அல்லது எரிக்கவோ மத்திய அரசு உத்தரவிட்டது. இது பார்சி மக்களின் மரபுக்கு எதிரானது.

இந்நிலையில் இதுகுறித்து  குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பார்சி இனத்தவர்களின் பஞ்சாயத்து அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.

அப்போது கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடலில் 9 நாட்கள் வரையில் வைரஸ் உயிருடன் இருக்கும் என்றும், அதனாலேயே இறந்தவர்களை புதைப்பது அல்லது எரிப்பது போன்ற நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது எனறு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனை பரிசீலித்த நீதிபதிகள்,  இறந்தவர்களின் உடலில் இருந்து வைரஸ் பரவுவதை தடுத்தல், பார்சி இன மக்களின் இறுதிச் சடங்குகளை கடைபிடித்தல் ஆகியவற்றை சமன்படுத்தும் வகையில் புதிய வழியை கண்டறிய மத்திய அரசுக்கு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *