பன்றி இதயத்தை பெற்றவரின் பின்னணி தொடர்பில் விமர்சனம்!

உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை மூலம் உலகில் முதல் முறை பன்றியின் இதயத்தை பெற்ற நபர், ஒருவர் மீது ஏழு தடவை கத்தியால் குத்தித் தாக்கிய குற்றவாளி என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

57 வயதான டேவிட் பென்னட், 1988ஆம் ஆண்டு, எட்வர்ட் ஷூமேக்கர் என்பவரை கத்தியால் குத்திய வழக்கில் குற்றவாளி என்று ஷூமேக்கரின் சகோதரி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை அடுத்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஷூமேக்கர் இரண்டு தசாப்தங்களின் பின் 2007இல் உயிரிழந்துள்ளார்.

ஆனால், ஒருவரது குற்றங்களின் பின்னணி, அவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்படுவதற்கு ஒருபோதும் காரணமாக இருக்க முடியாது என்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட குழு கூறியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. பென்னட்டின் மனைவி 22 வயதான ஷூமேக்கரின் மடியில் அமர்ந்ததே இதற்கு காரணம் என்று டவுனி குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலுக்காக அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *