இலங்கையில் தேனிலவு உலகின் மிகப்பெரிய கட்டிடத்தில் நிச்சயதார்த்தம்!

பிரித்தானியாவை சேர்ந்த இளம் ஜோடிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் பிரச்சினைகளை மீறி சமீபத்தில் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரித்தானியாவின் Penrith-ஐ சேர்ந்தவர் ஜோ ராபெல் (29). Warcop-ஐ சேர்ந்தவர் ஷனான் லேம்பர்ட் (26). இவர்களுக்கு கடந்த 2018ல் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதன்பின்னர் திருமணம் செய்ய முயன்றும் சூழ்நிலை அவர்களுக்கு கை கொடுக்கவில்லை, இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்தில் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தம்பதியை திருமணத்தின் போது தான் அவர்கள் சந்தித்தனர்.

திருமணத்துக்கு பின்னர் ஜோ மற்றும் ஷனான் ஆகிய இருவரும் Cyprus நாட்டுக்கு ஒருவாரம் தேனிலவு சென்றனர், பின்னர் சில வாரங்கள் இலங்கையில் தங்கள் தேனிலவை கொண்டாடிவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.

காதல் தொடங்கி கல்யாணம் வரை முடிந்த இவர்களின் கதை சுவாரசியமானது. புதுப்பெண் ஷனான் கூறுகையில், என் தோழியும், ஜோவின் தோழனும் காதலித்து வந்தனர். இவர்கள் மூலமே நானும், ஜோவும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம்.

ஜோ எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என்பதை பார்த்து வியந்திருக்கிறேன் மற்றும் அவர் எளிதாக பழகுவது எனக்குப் பிடித்திருந்தது. அதே போல அவருக்கும் என்னை பிடித்திருந்தது, இருவரும் எங்கள் காதலை வெளிப்படுத்தி கொண்டோம்.

இதையடுத்து கடந்த 2018ல் உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் எங்கள் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. எனக்கு இது பெரிய சர்ப்பரைஸ் தான், இந்த ஏற்பாடுகளை எல்லாம் ஜோ தான் ரகசியமாக செய்தார்.

இதன்பின்னர் ஒரு கட்டத்தில் ஜோவின் தாத்தாவும், பின்னர் என் பாட்டியும் உயிரிழந்தனர். இதன் காரணமாக எங்கள் திருமணம் தள்ளி போனது.

இதனை தொடர்ந்து மே 2020ல் மணக்க முடிவு செய்த போது கொரோனா வைரஸ் அதற்கு முட்டுகட்டை போட்டது. இப்போது பல சிக்கல்களை தாண்டி இருவரும் வாழ்வில் இணைந்துள்ளோம் என கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *