இரவில் மனைவியை விருந்தினர்களுக்கு விருந்தாக்கும் கணவன்மார்கள்!

நாகரீகம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் கூட நமீபியாவில் உள்ள பழங்குடியின மக்கள் தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக்கும் அதிர்ச்சி கலாச்சரம் அரங்கேறி வருகின்றதாம்.

ஆப்ரிக்காவின் தென் பகுதியில் உள்ள நாடு நமிபியா. இந்தநாட்டில் ஓவாஹிம்பா, ஓவாஸிம்பா ஆகிய பழங்குடின மக்கள் இருக்கிறார்கள்.

இவர்களிடம் “Okujepisa omukazendu” என்ற விநோதமான பழக்கம் இருக்கிறது. அதன் அர்த்தம் “விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக்கு”.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுடன் தன் மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டும். கணவன் வேறு அறையில் தங்கி கொள்ள வேண்டும். வேறு அறை இல்லை என்றால் வீட்டிற்கு வெளியில் படுத்துக்கொள்ள வேண்டும் எக்காரணத்தை கொண்டும் உள்ளே வரக்கூடாதாம். 

ஒருவேளை விருந்தினர்கள் தம்பதியாக அதாவது கணவன் மனைவியாக வந்தால் இருவரும் பரஸ்பரம் விரும்பினால் மனைவியை அன்று ஒரு நாள் இரவுக்கு மட்டும் மனைவியை மாற்றிக்கொள்வார்களாம். 

இந்த பழங்குடியின பெண்கள் இதை விரும்பி செய்கிறார்களாம். இது மட்டுமல்ல சில நேரம் மனைவியின் தோழிகளையே மனைவிகள் தன் கணவனுடன் “சந்தோஷமாக” இருக்க அனுப்பி வைக்கிறார்களாம். இப்படியாக தன் தோழியின் கணவனை சந்தோஷப்படுத்துவதால் தன் தோழியுடன் உள்ள நட்பின் ஆழத்தை உணர்த்தும் செயலாக பார்க்கின்றனர்.

ஆனால் இன்று அவர்கள் கலாச்சாரம் சற்று மாறியிருக்கிறது. மனைவி வேறு நபருடன் உடலுறவு கொள்வதை முடியாது என சொல்லாம். ஆனால் விருந்தினர் வந்தால் அவருடன் தான் ரூமில் இருக்கவேண்டும். இந்த கலாச்சாரம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பலர் இந்த கலாச்சாரம் பெண்களை கற்பழிப்பு செய்வதற்கு சமம் என விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் நமிபீயா நாட்டில் HIV/AIDS எனும் நோய் மிக அதிகமாக பரவி வருகிறது.

அதற்கு இந்த கலாச்சாரம் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதில் சோகம் என்னவென்றால் பல கணவன் மார்கள் மற்றவர்களால் ஏதாவது காரியம் சாதிக்க வேண்டும் என்றால் தன் வீட்டிற்கு அவர்களை விருந்தினர்களாக அழைத்து தன் மனைவியை விருந்தினர்களுக்கு “விருந்து” வைத்து காரியம் சாதித்துக்கொள்கிறார்களாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *