தமிழ் தலைவர்கள் கூறுவது போல், முஸ்லிம்களின் தலைவர் ஹக்கீம் அல்ல!

எங்கிருந்தோ வந்து வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பில் யார்
யாரெல்லாம் பேசுகிறார்கள் : சர்வதேச அஜந்தாக்களின் முஸ்லிம் கைக்கூலிகள் தொடர்பில் அவதானமாக இருக்கிறோம். – அதாவுல்லா எம்.பி விளாசல் !!பாராளுமன்றத்தில் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் தன்னுடைய இறுதிக்காலப்பகுதியில் ஒன்றை பேசினார்.

இணைந்த வடகிழக்கினுள் ஏதாவது அதிகாரம் என்று பேசும் கடைசி குரல் என்னுடையதாகவே இருக்கும். இதற்கு நீங்கள் செவிசாய்க்காவிட்டால் என்னுடைய சமூகம் வடக்கையும் கிழக்கையும் பிரிக்க கோரும் என்றார்.

இப்போது சர்வதேச அஜந்தாக்களுக்குள் கைக்கூலிகளாக எந்த முஸ்லிம் தலைவர்கள் அன்றிலிருந்து மாட்டிக் கொண்டார்களோ அவர்கள் இன்னும் அந்த இடத்திலிருந்து விடுபடவில்லை.அதனால் வடக்கு கிழக்கு இணைப்பை சாத்தியப்படுத்த கைக்கூலிகளாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களிடத்தில் நாங்கள் அவதானமாக இருக்கிறோம் என தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் நேற்று இரவு நடைபெற்ற விளாஸ்டர் விளையாட்டு கழக ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

அங்கும் இங்கும் கூட்டம் கூடுவதும், அவர்கள் பேசுவதும், கையெழுத்திட நினைப்பதும் இவர்கள் எங்கோ இருந்து வந்து கிழக்கு மக்களை இணைக்க பார்க்கிறார்கள். இதன் உண்மைநிலை என்ன? வெளிப்படையாக கூறப்போனால் வெளிநாட்டு சக்திகளின் கைக்கூலியாக இயங்குகின்ற தமிழ் தலைமைகளுக்கு முஸ்லிம் தலைவர்களாக இவர்கள் தான் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.

முஸ்லிங்களின் தலைமை கிழக்கில் யாரென்பதை தீர்மானிப்பது ஒருபுறமிருக்க எங்கோ இருக்கும் ஹக்கீமை முஸ்லிம் தலைவராக தமிழ் தலைவர்கள் கூறுகிறார்கள்.நாங்கள் தமிழர்களின் தலைவர்களாக யாரிருக்க வேண்டும் என்று கூறவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் எங்களுக்கு திணிக்கிறார்கள்.

வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் ஒரே வயிற்றில் பிறந்த குழந்தைகள் போன்று ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் பிளவுகள் இல்லை.

வெளிநாட்டவர்களின் தேவைகளுக்காக நமது மாகாணங்களை ஒன்றிணைப்பதும், வெளிநாடுகளின் தேவைகளுக்காக ஆயுதங்களை கொடுத்து தமிழ், முஸ்லிம், சிங்கள கலவரங்களை உண்டாக்கி ஆளை ஆள் சுட்டுக்கொண்ட வரலாறுகள் இருக்கிறது.

இவைகளெல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை அறியாமல் நாம் வாழவில்லை. வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் ஒரே வயிற்றில் பிறந்த குழந்தைகள் போன்று ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் பிளவுகள் இல்லை என்றார்.

-நூரூல் ஹூதா உமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *