அரச குடும்பத்தில் 2022-ஆம் ஆண்டு நடக்க போகும் மிகப் பெரிய மாற்றம்!

பிரித்தானியாவில் அரச குடும்பத்தில் வரும் 2022-ஆம் ஆண்டில் மிகப் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று மனநல ஊடக நிறுவனர் டெபி கணித்துள்ளார்.

உலகில் வரும் 2022-ஆம் ஆண்டு என்ன நடக்கப்போகிறது போன்ற கணிப்புகளை பாபா வங்க போன்றோர் கணித்துள்ளார். அது தொடர்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பிரித்தானியாவின் இங்கிலாந்தில் உள்ள Wilmslow-வில் வசித்து வரும், பிரபல மனநல ஊடக நிறுவனரான Deborah Davies,பிரித்தானியாவின் அரச குடும்பம் அடுத்த ஆண்டு சிக்கலான சில விஷயங்களை எதிர் கொள்ளவுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், வரும் 2022-ஆம் ஆண்டு அரச குடும்பத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் நடக்கவுள்ளன. மகாராணியார் பொதுமக்கள் பார்வையில் இருந்து படி படிப்பாயக குறைவதை நாம் பார்க்க போகிறோம்.

அதன் பின் நாம் இளவரசர் சார்லஸின்( மகாராணியின் மகன்) குறுகிய கால அரசராக பார்க்க முடியும் என்று நம்புகிறேன். ஆனால், அவர் நீண்ட காலத்திற்கு அரசராக இருக்க முடியாது. இளவரசர் வில்லியம் தான்( மகாராணியார் பேரன்) அடுத்த மன்னராக நீண்ட காலம் நீடிப்பார்.

இவர் ஒரு சிறந்த அரசராக இருக்க போகிறார். இவரைத் தொடர்ந்து கேட் மிடில்டனும் தனக்காக கொடுக்கப்படும் பதவியை பத்திரமாக பார்த்து கொள்வார், அதற்கு தகுதியானவளாக தன்னை உருவாக்கி கொள்வார்.

இது ராணிக்கு நன்றாக தெரியும், இவர்களுக்கு ராணியின் ஆதரவு இருக்கும். இதன் காரணமாகவே நான் அடுத்த ஆண்டு அரச குடும்பத்தில் மிகப் பெரிய மாற்றம் இருக்குமென்று கூறுகிறேன்.

அந்த மாற்றம் சார்லஸ் அரியணை ஏறுவதை பற்றி இருக்காது என்று கூறிய அவர், நாம் ஒரு அரசியலமைப்பு நெருக்கடியை காண நேரிடலாம் என்று கூறியுள்ளார். பிரபல மனநல ஊடகத்தை நடத்தி வரும் Debbie,அடுத்து என்ன நடக்கப்போகிறது போன்ற சில விஷயங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *