Omicron வைரஸ் தாக்க இது தான் காரணம் WHO வெளியிட்ட தகவல்!

Omicron வேகமாக பரவுவதற்கான காரணம் குறித்து உலக சுகாதாரத்துறை முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்த நிலையில் Omicron வைரஸ் பாதிப்பு பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இந்த புதிய மாறுபாடு மீண்டும் பொது முடக்கத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சில வாரங்களுக்கு முன்பு கண்டறிந்த இந்த வைரஸ் மெல்ல மெல்ல அனைத்து நாடுகளுக்கும் பரவி வந்துள்ளது. மற்ற வேரியண்ட்டுகள் உடன் ஒப்பிடும் பொழுது பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று பல மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

ஆனால் இதன் பரவல் உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், Omicron ஏன் இப்படி மின்னல் வேகத்தில் பரவுகிறது என்பது குறித்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு பகிர்ந்து கொண்டுள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது, Omicron மிக வேகமாக மக்களிடையே பரவ பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலாவதாக உருமாறிய கொரோனா என்பது எளிதாக மனித செல்களில் நுழையும் வாய்ப்பு கொண்டிருக்கிறது.

இரண்டாவதாக உருமாறிய கொரோனா நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம். அதாவது ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்படலாம்.

மற்றொரு முக்கிய காரணம் என்னவென்றால் மேல் சுவாசக் குழாயில் Omicron பரவல் டெல்டா மற்றும் பிற வகைகளிலிருந்து மாறுபட்டு உள்ளது. இதுபோல பல்வேறு காரணங்களால் தான் Omicron கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *