சிங்கங்கள் பசித்தாலும் புல்லை உண்பதில்லை ஆனந்த தேரர் பதிலடி!

சிங்கங்கள் எவ்வளவுதான் பசித்தாலும் புல்லை உண்பதில்லை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Muruttettuve Ananda Thera) தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தேரரிடம் இருந்து பட்டச் சான்றிதழைப் பெற மறுத்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

தன்னிடமிருந்து பட்டப்படிப்பு சான்றிதழை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அந்த பிள்ளைகளின் உரிமை. அதில் எந்த தவறும் இல்லை என்றும் அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலைகழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில், கொழும்பு BMICH இல் கடந்த 17, 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெற்றிருந்த போது, சில மாணவர்கள் தேரரின் கைகளில் இருந்து பட்டத்தை பெற மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *