இலங்கையில் மரக்கறி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலைகளில், ஓரளவு வீழ்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்புக்கு அப்பாலுள்ள பொருளாதார மையங்களில், இந்த நிலைமை காணப்படுகின்றது.

நாரஹேன்டிபிட்டி பொருளாதார மையத்தில் நேற்று, ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை 800 ரூபாயாகவும், மொத்த விலை 750 ரூபாயாகவும் காணப்பட்டது. பச்சை மிளகாய் கிலோகிராம் 900 ரூபாய்க்கு விற்பனையானது.

ரத்மலானை பொருளாதார மையத்தில், ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை 650 ரூபாயாகவும், பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 1,000 ரூபாயாகவும் காணப்பட்டது.

தம்புள்ளை பொருளாதார மையத்தில் கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 550 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 800 ரூபாய்க்கும் விற்பனையானது.

அதேபோல் போஞ்சி ஒரு கிலோகிராமின் மொத்த விலை, 280 ரூபாயாக காணப்பட்டது. நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்தில் போஞ்சி ஒரு கிலோகிராமின் மொத்த விலை 380 ரூபாயாவும், சில்லறை விலை 400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *