Great Place to Work ஆசியாவில் எயார்டெல் லங்கா தெரிவு!

Great Place to Work ஆனது எயார்டெல் லங்காவை ஆசியாவில் பணிபுரிவதற்கு சிறந்த பணியிடங்களில் தரவரிசைப்படுத்தியுள்ளது

கடந்த ஆண்டு முதல் தீவிரமாக பரவிய கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் வித்தியாசமான பல்வேறு சவால்களுக்கு மத்தியில், ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதுடன், இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமடைந்துள்ள.

தொலைத்தொடர்பு நிறுவனம் எயார்டெல் லங்கா ஆசியாவில் பணிபுரிவதற்கு சிறந்த பணியிடங்கள் – சிறிய மற்றும் நடுத்தர பட்டியல் 2021இல் பணிபுரிவதற்கு சிறந்த இடமாக அங்கீகரிக்கப்பட்டது.

எயார்டெல் லங்காவுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும், மேலும் புத்தாக்கம் மற்றும் நெகிழ்ச்சியான பணிபுரியுமிட கலாச்சாரத்திற்கான புத்தாக்கம் மற்றும் ஆரம்பகால மாற்றங்களை ஏற்படுத்தும் தனித்துவமான தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களில் ஒருவராக இருப்பதற்கான நிறுவனத்தின் முயற்சிகளுக்கு இது ஒரு சிறந்த சான்றாகும்.

எவ்வாறாயினும், முழு செயல்முறையிலும் ஊழியர்களின் தேவைகள் மற்றும் வசதிகளைக் புறக்கணிக்கவில்லை. உண்மையில், இது குறிப்பிட்ட ஊழியர்களை மையமாகக் கொண்ட பகுதிகளில் கவனம் செலுத்துவதை அதிகரிக்கிறது, அவர்கள் உழைக்கும் நேரத்தில், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் திருப்தி அடைவதற்கும், சாதிப்பதற்கும் உந்துதல் பெறுவதற்கும் ஊழியர்கள் செலவு செய்யும் நேரத்தில் உற்பத்தி திறன் கொண்டவர்களாக இருக்க முடியும்.
“இதுபோன்ற நேரங்களில், எங்கள் ஊழியர்களின் நலன்புரி நடவடிக்கைகளை உறுதி செய்வதில் இணைக்கப்படுவது ஒரு முக்கிய காரணியாகும். புத்தாக்கமான டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் அவர்களுடன் எங்களின் ஈடுபாட்டை அதிகரிப்பது, உணர்வுபூர்வமாகவும், உடல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வாய்ப்பை எங்களுக்கு அளித்தது.” என பாரதி எயார்டெல் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷீஷ் சந்திரா தெரிவவித்தார்.

எயார்டெல் லங்காவின் மனிதவள பிரதானி கனிஷ்க ரணவீர கூறுகையில், எயார்டெல் போன்ற பெரும்பாலான நிறுவனங்களுக்கு, அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய நான்கு முக்கிய பகுதிகள் உள்ளன.

முதலாவதாக, ஊழியர்களின் நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவது, தொற்றுநோய்களின் அச்சுறுத்தலில் இருந்து அவர்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவர்களின் உணர்ச்சி, உடல் மற்றும் நிதி நலன்புரி நடவடிக்கைகளிலும் ஒத்துழைப்பு வழங்குதல்.
இரண்டாவதாக, ‘Work from Home’ என்பதாகும். WFH கலாச்சாரம் உடல் ரீதியாக வேலைக்குச் செல்வதற்கு பதிலாக ஒரு புதிய மாற்றீடாக ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் அது ஒரு வருடம் முழுவதும், அது ஒரு வாழ்க்கை முறையாக மாற்றமடைந்தது.

மூன்றாவதாக, வசதியான மற்றும் நெகிழ்வான வேலை வாழ்க்கை முறையை பழக்கப்படுத்தியது. பணியாளர்கள் தங்களுக்கு ஏற்ற வேலை நேரத்தை வைத்து தங்களுக்கு மிகவும் பொருத்தமான நேரத்தில் வேலை செய்ய முடியும். நாங்கள் ஊழியர்களைக் கண்காணிக்க மாட்டோம், மாறாக உரிய நேரத்தில் கொடுத்த வேலையை முடிப்பார்கள் என அவர்களை நம்புகிறோம்.
இறுதியாக, ஊழியர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயனுள்ள கருவிகள் மற்றும் தளங்களைப் பயன்படுத்துதல். தளங்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகள்  ஆகியவற்றை விரைவாக மேம்படுவதையும், ஊழியர்களுக்கு ஏற்றவாறு மாறுவதையும் நிறுவனங்கள் கண்டுள்ளன, இது எங்களுக்கும் பொருந்துகிறது.

“இந்த நான்கு பகுதிகளிலும் கவனம் செலுத்துவதே போட்டியை விட எங்களுக்கு ஒரு எல்லையைக் கொடுத்தது. கடந்த ஆண்டு முதல் முடக்கம் (Lock-Down) நடைமுறைக்கு வருவதற்கு முன்பே இந்த மாற்றத்திற்கான செயற்பாடுகளை ஆரம்பித்ததுடன், இந்த செயல்முறைக்கு விரைவாகவும் திறமையாகவும் மாறுவதற்கு உதவியது. எனவே, எங்கள் கலாச்சாரம் மிகவும் ஒத்துழைப்பாகவும், பக்கசார்பாகவும் மாறியுள்ளது, மேலும் எங்கள் ஊழியர்களை அதிக தேவையை கையாளுவதற்கு அதிக வசதிகளை வழங்குகிறது.” என கனிஷ்க தெரிவித்தார்.

மிக முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளுக்கு மேலதிகமாக, எயார்டெல்லின் வெற்றிக்கு இரண்டு முக்கிய காரணிகள் உள்ளன – ஊழியர்கள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையின் அளவு மற்றும் அவர்கள் எவ்வாறு புதிய இயல்புகளை ஏற்றுக்கொண்டார்கள் மற்றும் மாற்றியமைத்தார்கள். “நல்ல உறவுகள் மற்றும் நம்பிக்கையில் மனிதர்கள் முன்னேற்றமடைந்து வருகிறார்கள், மேலும் எங்கள் ஊழியர்களுக்கான அணுகுமுறையும் அதையே பிரதிபலிக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலோபாய வர்த்தகத் தொடர்ச்சித் திட்டங்களுடன் கூடிய எயார்டெல் லங்கா, ஊழியர்களிடையே பாதுகாப்பு உணர்வை மேம்படுத்துவதற்கும் வலியுறுத்துகிறது. அவர்களுக்குத் தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களிலிருந்து, முன்னுரிமை சிகிச்சைகளுக்கான தரமான சுகாதாரப் பாதுகாப்பு, கோவிட் தொடர்பான பரிசோதனைக்கான காப்பீடுகள் மற்றும் oDoc மூலம் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேலும், துரதிர்ஷ்டவசமாக ஒரு ஊழியர் கொரோனா வைரஸுக்கு இலக்கானால், அந்த காலகட்டத்தில் தொலைத்தொடர்பு நிறுவனம் விடுமுறையுடன் கூடிய ஊதியம் மற்றும் குடும்பங்களுக்கும் உதவியளிப்பதை உறுதி செய்கிறது.

“எங்கள் ஊழியர்களுடனான எங்கள் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் நாங்கள் அதை ஒரு விடயமாகக் கொண்டுள்ளோம். எப்போதும் புதிய மற்றும் புத்தாக்கமான டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் இணைக்கப்பட்டு, பொழுதுபோக்கான மற்றும் வளர்ச்சிக்கு உதவும் மெய்நிகர் விளையாட்டுக்களில் (Virtual Games) ஈடுபடுதல், மேலும் பாரம்பரிய நிகழ்வுகள் மற்றும் போட்டிகளை ஒன்லைனில் நடத்துதல், Bakthi Gee (மதம் சார்ந்த பாடல்கள்) மற்றும் Carols முதல் கலைப் போட்டிகள் வரை முழு குடும்பமும் பங்கேற்க வேண்டும் என ஊழியர்களை வலியுறுத்துகின்றோம்.” என கனிஷ்க கூறினார்.

“பெரு நிறுவன மட்டத்தில் கூட, தகவல்தொடர்புகளை மேம்படுத்துதல், மற்றும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பின்னர், CEO Connect மற்றும் HR Connect அமர்வுகள் இடம்பெற்றன.”
தொலைத்தொடர்பு நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் ஊழியர்களின் அக்கறைக்காக செய்யப்பட்ட அனைத்து முதலீடுகளின் விளைவானது திருப்திகரமான வாடிக்கையாளர் தளமாகும். எயார்டெல் லங்காவின் ஈடுபாடுகள் மிகக் குறைந்த அளவில் முன்னேற்றமடைந்துள்ளன. இது திருப்திகரமான ஊழியர்கள் புதிய இயல்பில் நிறுவனத்தை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதால், தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் பணியாளர்களை தொடர்ந்து புத்தாக்கமடையச் செய்யவும், செயல்படுத்தவும் உறுதியளிக்கிறது.

பாரதி எயார்டெல் லங்கா நிறுவனம் தொடர்பாக:
2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *