Audi உடன் இலங்கையில் நிகரற்ற உயரத்தில் அடியெடுத்து வைக்கத்தயாராகும் Drive One

கடந்த ஆண்டு Audi வாகனங்களின் விநியோகத்தினை பொறுப்பேற்ற Drive One (Pvt) Ltd நிறுவனம் Audi  வாகன நாமத்தினை இலங்கையின் உச்சத்திற்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

Audi AG Germany நிறுவனத்தின் விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்திய சேவை, அசல் உதிரிப்பாகங்கள் மற்றும் துணை (accessories) பாகங்களுக்கான உத்தியோகபூர்வ பிரிதிநிதியாக Drive One (Pvt) Ltd இலங்கையில் நியமிக்கப்பட்டுள்ளது.

Drive One (Pvt) Ltd, நிர்வாக இயக்குனர்  ஹிரான் டி சில்வா “மிகவும் பெருமைக்குரிய Audi வணிகநாமத்தை இலங்கையில் பிரதிசெய்வதையிட்டு Drive One நிறுவனம் ஆனந்தமடைகின்றது.

எமது வாடிக்கையாளர்களே எமது பிரதான நோக்கு என்பதுடன் அவர்களுடன் நீண்டகால உறவினை சிறப்பான சேவை ஊடாக கட்டியெழுப்புகின்றோம். 2020 ஆண்டளவில் தேசத்தின் சிறந்த மோட்டார் வாகன நாமமாக Audi யினை மாற்றும் அர்ப்பணிப்புடன் Drive One நிறுவனம் செயற்படுகின்றது’ என தெரிவித்தார்.

Drive One  அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான விற்பனைக்கு பிந்திய சேவையை வழங்குகின்றது. விற்பனைக்கு பிந்திய மற்றும் தொழில்நுட்ப உதவி சேவைகள் உட்பட Audi AG’s top diagnostic information systems  தகவல் மையத்திற்கான அனுமதியை இந்நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது.

அதாவது Drive One  தொழில்நுட்ப அணிக்கு வாகனத்தின் பராமரிப்பு விபரம், வேலைத்தள குறிப்பேடுகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், மென்பொருள் மேம்படுத்தல், பராமரிப்பு இலக்குகள் ஆகிய தகவல்களை தமது நிறுவனத்தின் ஊடாக மட்டும் கொள்வனவு செய்யப்படும் வாகனங்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்க முடியும்.

கடந்த அக்டோபர் மாதம் Audi விநியோக உரிமையை பொறுப்பேற்றது தொடக்கம் Drive One பல நவீன மாற்றங்களையும் முதலீடுகளையும் Audi வணிகநாம மேம்பாட்டிற்காக ஏற்படுத்தியுள்ளது.

அதிநவீன பழுதுபார்க்கும் பராமரிப்பு நிலையம், மற்றும் துல்லியமான விற்பனைக்கு பிந்திய சேவை என்பன அதில் அடங்கும். 24 மணிநேர வீதியோர உதவி சேவை, ஊழியர் பயிற்சிகளில் முதலீடு, சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த அலுவலக விஸ்தரிப்பு என்பனவும் மேலதிக சேர்ப்புகள் ஆகும்.

யுரனi யுபு அனுமதித்துள்ள 100,000 சதுரஅடி, நான்குமாடி பராமரிப்பு நிலையத்தை னுசiஎந ழுநெ வத்தளையில் நிர்மாணித்து வருகின்றது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ள இந்த நிலையம் வாடிக்கையாளர்கள் உத்தரவாதம் கொண்ட விற்பனைக்கு பிந்திய சேவையை பெற்றுக் கொள்வதையும் வடிவமைப்பாளரின் வடிவம் மற்றும் தரத்திற்கு நிகரான தரத்தைப் பெற்றுக் கொள்வதையும் உறுதிப்படுத்தும்.

புகைப்படங்கள்-
படம் 03 (இடமிருந்து வலம்) திரு. ரோஷான்த காரியவசம் – பிரதான நிதிசார் அதிகாரி, திரு. உபாலி ஏக்கநாயக்க – பொது முகாமையாளர் விற்பனைக்கு பிந்திய சேவை, திரு. மதுர அமரசிங்க – பணிப்பாளர், திரு. ஹிரான் டி சில்வா – நிர்வாக இயக்குனர், திரு. நெமன்தா ஹதரசிங்ஹ – பணிப்பாளர், திரு. அனுஷ்க பொலனோவிற்ற – பிரதான செயற்பாட்டு அதிகாரி, திரு. க. ஜெயசீலன் – பொதுமுகாமையாளர் நிதி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *