ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கான உரிமையை எவரும்தடுக்க முடியாது!

“எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை காணப்படுகின்றது. ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமையை எவராலும் தடுக்க முடியாது

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றபோது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை காணப்படுகின்றது. எவ்வாறிருப்பினும் கொரோனா நிலைமையைக் கருத்தில்கொண்டு அதற்கு ஏற்றால்போல் ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். காரணம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் அவை தொடர்பில் கவனம் செலுத்த முடியாது.

பெரும்பாலானவர்கள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது எவ்வாறு தொற்று பரவும் என்பதை அனைவரும் அறிவர். எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமையை எவராலும் தடுக்க முடியாது. நாம் வேறு பயணத்தை ஆரம்பிக்கவில்லை.

மாறாக கட்சியை மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். கட்சியை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *