அரசாங்கம் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் மாதம் 30ஆயிரம் ரூபா திருடுகிறது!

தற்போதைய நிர்வாகமும் அதன் பங்காளிகளும் ஒரு குடும்பத்திலிருந்து மாதந்தம் கிட்டத்தட்ட ரூ. 30,000 திருடுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
6.9 மில்லியன் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து அரசாங்கத்திற்கு பிரசாரம் செய்து வாக்களித்ததாகவும், இதன் மூலம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு வழிவகுத்ததாக பாராளுமன்ற உறுப்பினரான துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பால்மாவின் விலையை அதிகரிப்பதன் மூலமும், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் தரவுத்தளத்திலுள்ள கோப்புகள் காணாமல் போனதன் மூலம் அரசாங்கம் பொதுமக்களுக்கு தொடர்ந்து சுமையை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக கருத்துக்கள் இருந்தால் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தமது எதிர்ப்பை தெரிவிக்குமாறு அமைச்சர்களுக்கு அவர் சவால் விடுத்தார்.

அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என அண்மைய சம்பவங்கள் ஊடகக் காட்சிகளாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் போது தாங்கள் இதேபோன்ற கூற்றுக்களை முன்வைத்ததாகவும், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களை பாராளுமன்றத்திற்குள் நுழைய ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர் பாராளுமன்றத்தில் பிரவேசித்தது மட்டுமன்றி நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மொத்த நிதியில் 55-60 % அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *