மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைத்தது சீனா!

கடன் மற்றும் ஒப்பந்தக் கடிதத்தின்படி இரு தரப்பிற்கு இடையிலான உடன்படிக்கைகளின் பிரகாரம், பணம் செலுத்த தவறியதை அடுத்து, இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியினை கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தினால் கருப்பு பட்டியலில் இணைத்துள்ளது.

கடந்த வாரத்தில் சீனாவின் உர நிறுவனமான Qingdao Seawin Biotech Group Co., Ltd, ஒப்பந்தங்களின்படி, இலங்கை மக்கள் வங்கியின் L/C கட்டணத்தைப் பெறுமாறு கோரியது. ஒப்பந்தம், வணிக விதிகள் மற்றும் சர்வதேச வர்த்தக முறைகளை புறக்கணித்து, இலங்கை மக்கள் வங்கி L/C செலுத்தத் தவறி, சீன நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *