ஆடைகளின்றி இறந்து கிடந்த 2 பெண்கள் 34 ஆண்டுகளுக்கு பின் கொலைக்கு பொறுப்பேற்ற முதியவர்!

பிரித்தானியாவில் ‘பெட்ஸிட் கொலைகள்’ என்று அறியப்பட்ட இரண்டு இளம் பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

1987-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கென்ட் கவுன்டியில் உள்ள Tunbridge Wells நகரத்தில், வென்டி (25) மற்றும் கரோலின் (20) எனும் இரண்டு இளம் பெண்கள் 5 மாத இடைவெளியில் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவர்கள் வசித்துவந்த இடத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில் ஆடைகளின்றி பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இவர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள் அல்ல, ஆனால் இருவரும் நகரத்தின் மைய்யத்தில் ஒரே தெருவில் வேலை பார்த்துவந்தனர். இதனால் இந்த இரண்டு கொலைகளும் ‘Bedsit Murder’ என்று அழைக்கப்பட்டது.

கடை மேலாளராக இருந்த வெண்டி (Wendy Knell) ஜூன் 23, 1987 அன்று வேலைக்குச் செல்லத் தவறியதால் கில்ட்ஃபோர்ட் சாலையில் உள்ள தனது தரை தள படுக்கையில் இறந்து கிடந்தார்.

அன்று இரவு 11 மணியளவில் அவளை வீட்டிற்கு செல்வதற்கு முன், பஸ் டிரைவராக பணிபுரிந்த தனது காதலனுடன் இரவைக் கழித்துள்ளார் என கூறப்படுகிறது.

அதனைஎடுத்து, கரோலின் (Caroline Pierce) ஐந்து மாதங்களுக்குப் பிறகு க்ரோஸ்வெனர் பூங்காவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே தாக்கப்பட்டார். அவர் கடைசியாக நவம்பர் 24 நள்ளிரவில் ஒரு டாக்ஸியில் இருந்து இறக்கி விடப்பட்டபோது காணப்பட்டார்.

இந்த இரண்டு பெண்களும் தங்களிடமிருந்த சாவி இல்லாமல் நிர்வாணமாக இறந்து கிடந்தனர். அவர்களிடமிருந்த அந்த சாவிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன.

இந்நிலையில் 34 ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், வெண்டி மற்றும் கரோலின் ஆகிய இரண்டு போரையும் கொலை செய்ததாக சந்தேகத்திப பேரில், கிழக்கு சசெக்ஸின் ஹீத்ஃபீல்டில் இருந்து டேவிட் ஃபுல்லர் (David Fuller) எனும் 67 வயது நபர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை Maidstone Crown நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டேவிட் ஃபுல்லரிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, கொலைக்கான பொறுப்பை ஏற்பதாக கூறியிருந்த நிலையில், கொலை செய்தததை மறுத்துவிட்டார்.

இந்நிலையில், அவரது விசாரணை அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டேவிட் புல்லர் திடீரென தன் மீதான குற்றச்சாட்டை ஏற்கவில்லை என்பதால், இந்த வழுக்கில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *