45 ஆயிரம் டொலர் லொட்டரி பரிசு சீட்டுடன் பிணமாக கிடந்த நபர்!

கனடாவில் பரிசு விழுந்த லொட்டரி சீட்டுடன் பிணமாக கரை ஒதுங்கிய நபரின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பொலிஸார் சந்தேகத்தின்பேரில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் செப்டம்பர் 24, கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள ஹுரான் கவுண்டியின் உயிரிழந்தவர் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த 57 வயதான கிரிகோரி ஜார்விஸ் (Gregory Jarvis) என்று விசாரணையில் கண்டறியப்பட்டது.

சடலத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில், நீரில் மூழ்கியதால் அவருக்கு மரணம் ஏற்பட்டதாக முடிவு செய்யப்பட்டதனால், ஜார்விஸ் தனது படகில் சமநிலையை இழந்து, தற்செயலாக மண்டையில் மோதி தண்ணீரில் விழுந்ததாக பொலிஸார் கூறியிருந்தனர்.

இதனையடுத்து , இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் திறக்கவுள்ளதாக தெரிவித்த, உள்ளூர் காவல்துறை லொட்டரியில் அவர் வென்ற பரிசுத்தொகை இறந்தவரின் உறவினர்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *