ஜேர்மன் தேர்தலில் முதன் முறையாக வெற்றி வாகை சூடி வரலாறு படைத்த திருநங்கைகள்!

ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுத்தேர்தலில் Greens கட்சியைச் சேர்ந்த இரண்டு திருநங்கைகள் வெற்றி வாகை சூடி வரலாறு படைத்துள்ளனர்.

Greens கட்சியை வேட்பாளராக போட்டியிட்ட Tessa Ganserer, Nyke Slawik இருவருமே ஜேர்மன் பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்ற முதல் திருநங்கைகள் என வரலாறு படைத்துள்ளனர்.
இது Greens கட்சியினருக்கு ஒரு வரலாற்று வெற்றி, Greens கட்சியினருக்கு மட்டுமின்றி rans-emancipatory இயக்கம் மற்றும் ஒட்டுமொத்த queer சமூகத்திற்கும் இது வரலாற்று வெற்றி தான் என 44 வயதான Ganserer கூறினார்.

ஜேர்மன் பொதுத்தேர்தல் முடிவுகள் ஒரு திறந்த மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட சமூகத்தின் அடையாளமாகும்.

Ganserer-ன் முன்னுரிமை பட்டியலில், அடையாள ஆவணங்களில் பாலியல் மாற்றத்தை உறுதிப்படுத்துவதற்கான எளிதான செயல்முறை கொண்டு வருவதே  முதலிடம் பிடித்துள்ளது.

இரண்டு மகன்களைக் கொண்ட Ganserer, லெஸ்பியன் தாய்மார்கள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு அனுமதிக்கும் சட்ட மாற்றங்களையும் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

North Rhine-Westphalia-வில் வெற்றிப்பெற்ற 27 வயதான Slawik, தேர்தல் முடிவுகளை என்னால் நம்பவே முடியவில்லை என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

homophobia மற்றும் transphobia, ஒரு சுயநிர்ணய சட்டம் மற்றும் கூட்டாட்சி பாகுபாடு எதிர்ப்பு சட்டத்தை மேம்படுத்துவதற்கு எதிராக நாடு தழுவிய செயல் திட்டத்திற்கு Slawik அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *