வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்ட நடிகர் ஷாருக்கான்!

ஹிந்தி நடிகர் ஷாருக் கான் விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்ட நிகழ்வை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு சில நிமிடங்களில் லட்சக்கணக்கில், அதனை ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்.

இந்தி திரையுலகின் பிரபல நடிகரான ஷாருக் கான் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டில் விநாயகர் சிலையை வைத்து, பூஜைகள் செய்து, வணங்கி உள்ளார்.

இந்த நிலையில், விநாயகருக்கு விடை கொடுத்து நேற்று முன்தினம் இரவு, அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், அடுத்த ஆண்டு, விநாயக கடவுளை காணும் வரை அவரது ஆசிகள் நம் அனைவரிடமும் தொடர்ந்து இருக்கும். கணபதி பாபா மோரியா என தெரிவித்து உள்ளார்.

இந்த பதிவு வெளியான ஒரு சில நிமிடங்களில் அவரது ரசிகர்கள் லட்சக்கணக்கில் அந்த பதிவை பகிர்ந்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டில், தனது இளைய மகன் ஆபிராம் கான், விநாயக கடவுளை வணங்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டார்.

இந்தநிலையில் ஷாருக்கானின் மதசார்பற்ற அணுகுமுறைக்காக அவருக்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மறு புறத்தில் விமர்சனங்களும் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *