கின்னஸ் சாதனை படைத்த 107 வயது இரட்டையர்கள்!

ஜப்பானில் உள்ள 125 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 29 சதவீதம் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்று சுகாதார நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 107 வயதான ஜப்பானிய இரட்டையர்கள் உலகின் வயதானவர்கள் என்ற சாதனையை படைத்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். இரு சகோதரிகளும் 107 வயது, 330 நாட்களை கருத்தில் கொண்டு உலகின் வயதான இரட்டையர்கள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

சகோதரிகளான உமேனோ சுமியாமா மற்றும் கோமே கோடாமா 1913, நவம்பர் 5-ல் 11 உடன்பிறப்புகளுடன் மூன்றாவது மற்றும் நான்காவது பிள்ளைகளாக மேற்கு ஜப்பானில் உள்ள ஷோடோஷிமா தீவில் பிறந்தனர்.

பல பத்தாண்டுகளாக தங்கள் சொந்த வாழ்க்கையில் பிசியாக இருந்த சகோதரிகள், 70 வயது வரை அரிதாகவே சந்தித்துள்ளனர். தற்போது தனித்தனியாக ஹோம்களில் வசித்து வரும் இவர்களிடம் கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது.

முன்னதாக, பிரபல ஜப்பானிய இரட்டை சகோதரிகள் கின் நரிதா மற்றும் ஜின் கேனி ஆகியோர் 107 ஆண்டுகள் மற்றும் 175 நாட்கள் என்ற முந்தைய சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *