மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியது பசிலே அசோக அபயசிங்க தெரிவிப்பு!

மதுபானக் கடைகளைத் திறக்க நிதி அமைச்சர் பசில் அனுமதி வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் தலையீடுகளின் காரணமாக மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டுகிறது.

நாட்டில் சுமார் 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். ஆனால் இப் போது கிராமங்களில் வாக்களித்த நபர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது என்றும் நாங்கள் வாக்களித்தது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் தற்போது அமைச்சர்கள் ஜொக்கிங் ட்ரக்கில் சென்று பௌத்த துறவிகளைச் சந்திக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளின் போது பொது மக்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாவை 2000 ரூபாவாக் குறைத்து அந்தத் தொகையும் இப்போது வழங்கப்படுவதில்லை என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள பொலிஸ் நிலையங் களுக்கு நியமிக்கப் பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் அமைச்சர்களின் தேவைக்கேற்ப நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒரு நாடு ஒரு சட்டமாகச் செயற்பட வேண்டும். ஆனால் நாட்டு சொத்துக்களை விற்க மாட்டோம் எனத் தெரிவித்தனர். தற்போது என்ன நடந்துள்ளது? என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு மூன்று நேரம் உண்ண உணவில்லை என்றும் இரண்டு நேரம் மாத்திரம் தான் உணவை உட்கொள்வதாகவும் நாட்டில் நிதிப் பற்றாக்குறை நிலவுவதாகவும் செலவினங்களைக் குறைக்குமாறு நிதி அமைச்சர் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2000 ரூபா மற்றும் 5000 ரூபா கொடுத்து மதுபான போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்பதாக இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர் என்றும் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் மதுபான கடைகளைத் திறந்தால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்பதற்காகத் தான் திறக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மது பானக் கடையைத் திறப்பதற்கு அனுமதி வழங்கவில்லை, எங்களுக்குத் தெரியாது என மதுவரி திணைக்களம் மற்றும் நுகர்வோர் அதிகார சபை கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பசில் மதுபான கடைகளைத் திறக்க அனுமதி வழங்கினார் எனவும் அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *