இங்கிலாந்து கால்பந்து அணியின் ஜாம்பவான் காலமானார்!

1966 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்தின் மிகச்சிறந்த ஸ்ட்ரைக்கர்களில் ஒருவர் மற்றும் கால்பந்து அணியின் ஜாம்பவானான ஜிம்மி கிரீவ்ஸ் தனது 81 வயதில் காலமானார்.

இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து ஸ்ட்ரைக்கரும்,டோட்டன்ஹாம் அணிக்கு சாதனை கோல் அடித்தவருமான ஜிம்மி கிரீவ்ஸ்க்கு பிப்ரவரி 2012 இல் ஏற்பட்ட லேசான பக்கவாதத்தைத் தொடர்ந்து,அவரது கழுத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முழுமையாக குணமடைந்த பிறகு,அவர் மீண்டும் மே 2015 இல் கடுமையான பக்கவாதத்தை அனுபவித்தார்.

இதன் காரணமாக,அவரால் பேச முடியவில்லை.அவர் தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டார், மருத்துவர்களின் கூறியதுபோல மெதுவாக குணமடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஒரு மாதம் கழித்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து,பிப்ரவரி 2016 அவர் மீண்டும் நடக்க மாட்டார் என்று கூறப்பட்ட பிறகு சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி மெதுவாக பக்கவாதத்திலிருந்து மீண்டார்.

இந்நிலையில்,உடல்நலக்குறைவு காரணமாக ஜிம்மி கிரீவ்ஸ் தனது 81 வது வயதில் இன்று காலமானார்.இதனால்,அவரது மறைவுக்கு இங்கிலாந்து விளையாட்டு பிரபலங்கள்,கால்பந்து நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *