ஜெயலலிதா எம் ஜி ஆரின் கள்ளக் காதலியா?

சமீபத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மய்யமாக கொண்டு வெளியான தலைவி படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இந்த படத்தின் ப்ரோமா, ட்ரைலர் ஆகியவற்றை பார்த்தவர்கள், படம் முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு – ஜெயலலிதாவுக்கு இடையில் நடந்த அரசியல் குறித்த படம் என மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆனால் திரையில் சென்று பார்த்த, எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் அதிமுகவினருக்கு ஏமாற்றம் மட்டுமில்லை படத்தை இயக்கிய இயக்குனர் மீது கோவத்தை ஏற்படுத்தியது.

எம்ஜிஆரின் இதயம் என அறியப்பட்ட ஆர்.எம்.வீரப்பனுக்கும் ஜெயலலிதாவுக்கு இடையில் நடக்கும் அரசியலை மய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் கதைகள் போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. திமுகவில் இருந்து எம்ஜிஆர் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக கருணாநிதி உடன் சண்டையிட்டு வெளியேறியதாக படத்தில் காட்சிகள் அமைந்துள்ளது, ஆனால் கணக்கு கேட்டதால் வந்த பிரச்சனையில் எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டது தான் உண்மை என்கின்றனர் எம்ஜிஆர் ரசிகர்கள்.

மேலும் படத்தில் கருணாநிதி இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் அவரை நல்லவர் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் சில இடங்களில் கருணாநிதியை புகழ்வது போன்று அவர் தான் சிறந்த தலைவர் என்பது போன்ற வசனங்கள் இடம்பெறுவது படத்தின் இயக்குனர் திமுகவின் அனுதாபி என்பதை காட்டுவதாக படத்தை பார்த்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர், மேலும் படத்தில் இடம் பெற்றுள்ள மெதுவடை தொடர்பான காட்சிகள் இயக்குனரின் உச்சகட்ட முட்டாள் தனம் என கொந்தளிக்கின்றனர் அதிமுக விசுவாசிகள்.

ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் இடம்பெறும் காட்சிகள் பல, இருவரும் தனிமையில் சந்திப்பது, காரில் இருவரும் ஒன்றாக பயணிப்பது, பொது இடங்களில் ஜெயலலிதாவை நெருக்கமாக தொட்டு எம்ஜிஆர் பேசுவது. மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் தனியாக ஒரு அறையில் இருக்க, அந்த அறையின் வெளியில் ஆர்.எம்.வீரப்பன் காத்திருப்பது போன்ற காட்சிக்கள் குறித்து பிரபல மூத்த சினிமா நடிகர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தை பார்த்தவர்கள் இயங்குனர் விஜய் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் உருவான தலைவா படம் வெளியாவதில் சிக்கலை சந்தித்தது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தான் அந்த சிக்கலுக்கு காரணம் என கூறப்பட்டது. இதை மனதில் வைத்து கொண்ட இயக்குனர் விஜய், தலைவி படத்தில் எம்ஜிஆரின் கள்ள காதலி தான் ஜெயலலிதா என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் காட்சிகளை வைத்து தனது வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *