எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இருந்து 5 வயது பிள்ளைகளுக்கு தடுப்பூசி!

அமெரிக்கா வரும் அக்டோபர் மாதத்திலிருந்து 5 வயதுப் பிள்ளைகளுக்கு Pfizer தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

5 முதல் 11 வயது வரையிலான பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடுவதற்கு அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகத்திடமிருந்து (FDA) இம்மாத இறுதிக்குள் அனுமதி பெற Pfizer நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக டெல்டா வகைக் கிருமிப்பரவல் மோசமடைந்துள்ள நிலையில் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல தொடங்கியுள்ளனர்.

அதனால், அக்டோபர் மாதத்திலிருந்து 12 வயதுக்குக் குறைவான பிள்ளைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அனுமதியைப் பெற Pfizer நிறுவனம் முந்துகிறது.

இளம் குழந்தைகளுக்கான தடுப்பூசியை அங்கீகரிக்கலாமா என்ற முடிவு மில்லியன் கணக்கான அமெரிக்கர்களால் ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக டெல்டா வகை தொற்றுக்கு அதிகரிப்பதற்கு மத்தியில் சமீபத்திய வாரங்களில் பள்ளிக்கு செல்ல தொடங்கிய குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த முடிவுக்காக ஆர்வமாக உள்ளனர்.

இதற்கிடையில், Moderna நிறுவனம் 5 வயது பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடும் அனுமதியை நவம்பர் மாதத்தில் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அந்நாட்டு அரசு தொடங்கி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஆறு மாதம் முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கு சீனாவின் சினோவாக் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 2,000 குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *