அனுமதி இன்றி பயணம் செய்தால் மூன்று ஆண்டுகள் பயணத்தடை!

கொரோனா பரவல் காரணமாக பல நாடுகள் தங்களுடைய சர்வதேச விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.

அதில், சரக்கு விமானம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான விமான போக்குவரத்து தவிர பயணிகள் விமானங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

சில நாடுகள் கடுமையாக்கியும் உள்ளன. அந்த வகையில், தங்களது ‘ரெட் லிஸ்ட்’ பட்டியலில் உள்ள நாடுகளுக்கு தங்கள் நாட்டு மக்கள் பயணம் மேற்கொள்ள தடை விதித்துள்ளது சவூதி அரேபிய அரசவை.

இந்த தடையை மீறி பயணம் மேற்கொண்டால் சம்மந்தப்பட்டவர் மூன்று ஆண்டு காலம் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் இந்த ஏற்பாடு எனத் தெரிகிறது. அந்த நாட்டின் ரெட் லிஸ்டில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பிரேசில், அமீரகம், எகிப்து மாதிரியான நாடுகள் இடம் பெற்றுள்ளன.

மக்கள் யாரேனும் இந்த நாடுகளுக்கு சென்று திரும்பி இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு அதிக அளவிலான அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *