உலகம் முழுவதும் முடங்கப்போகும் இணையத்தளம் புயலால் ஆபத்து!

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சூரிய காந்தப் புயலால் உலகம் முழுவதும் இன்டர்நெட் முடங்க வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சூரியனில் இருந்து அதிகளவில் காந்தத் துகள்கள் வெறியேறி பூமியை நோக்கி பொழிவதே சூரியகாந்த புயல் என்று சொல்லப்படுகிறது.

பூமியில் காந்த சக்தி இருப்பதால் இது மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் செயற்கைக்கோள்கள் மற்றும் நீண்ட தூர கேபிள்கள் உள்ளிட்டவற்றை கடுமையாக பாதிக்கும் என கலிபோர்னியா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த அரிய நிகழ்வு கடந்த 1859 முதல் 1921 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்ததாம்.

அச்சமயம் இன்டர்நெட் சேவை பெருமளவு வளர்ச்சி அடையாததால் அப்போது பாதிப்பு ஏதும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. மின் துண்டிப்பு மற்றும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இணைய வசதி இல்லாமல் ஏதுமில்லை என்கிற இக்காலகட்டத்தில் சூரிய காந்தப்புயல் நேர்ந்தால் உலகம் முழுவதும் இணைய பேரழிவு உண்டாக வாய்ப்பு இருப்பதாக அதிரவைக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சூரிய காந்தப்புயல் கடலுக்கு அடியில் உள்ள இணைய கேபிள்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பலுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் பாதிக்கப்படாது. எனினும் அமெரிக்கா – ஆசிய நாடுகளுக்கு இடையேயான இணையத் தொடர்பு கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அமெரிக்காவுக்கு பில்லியன் டாலர் கணக்கில் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

அதே போல, இணைய சேவையை வழங்கும் நிறுவனங்கள் பெரும் அளவு பாதிக்கப்படும் என்றும் இந்த பாதிப்பு பல மாதங்களுக்கு தொடரும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்டர்நெட் இல்லாத உலகை நம்மால் யோசித்துப் பார்க்கக் கூட இயலாது. சூரிய காந்தப்புயலால் அப்படி ஒரு நிலைமை வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *