சினோபார்ம் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு மூன்றாவது முறை செலுத்த பரிந்துரை!

சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு தடுப்பூசியின் மூன்றாவது அளவையும் வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வைத்திய சங்கம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அஸ்ட்ராஸெனேகா, பைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை மூன்றாவது அளவாக வழங்க முடியும் என இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பஹ்ரெய்ன் நாட்டிலும் ஶ்ரீ ஶ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய, 60 வயதுக்கு குறைவானவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்குவதன் மூலம் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தரப்பினர் உயிரிழப்பு மற்றும் கடுமையான நோய் நிலைமைகளுக்கு ஆளாகுதல் ஆகியன குறைவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 18 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட கடுமையான நோய் அறிகுறிகள் அற்ற நபர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் வழங்கப்படுவது போதுமானது என இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், 12 முதல் 18 வயதுடைய தரப்பினருக்கு பைஸர் தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமென இலங்கை வைத்திய சங்கம் பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாவது அளவு கிடைக்கப் பெறாதவர்களுக்கு, பைஸர் அல்லது மொடர்னா தடுப்பூசியை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *