கொரோனா நோயாளிகளிற்கு பெரும் சேவையாற்றிய தாதி கொரோனாவால் மரணம்!

மினுவாங்கொட மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிற்கு பெரும் சேவையாற்றிய மருத்துவ தாதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.

வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவதில் மருத்துவர்களும் தாதிமார்களும் விலைமதிப்பற்ற சேவையை ஆற்றி வருகின்றனர்.

ஆனால் சுகாதார மருத்துவ பணியாளர்கள் கொரோனாவினால் மரணிப்பது எவ்வளவு துரதிஸ்டவசமானது? இரண்டாவது அலையின் போது மினுவாங்கொடையில் பெருமளவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டவேளை அப்பகுதியில் கொரோனா சிகிச்சைக்கான வோர்ட் காணப்படவில்லை. மினுவாங்கொடை மருத்துவமனைக்கு மிகவும் அவசியமாகயிருந்த கொரோனா வோர்ட் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சு முன்னெடுத்த அந்த திட்டத்தினை முன்னின்று நடைமுறைப்படுத்தியவர்,மினுவாங்கொடை மருத்துவமனையின் மருத்துவதாதி இந்துஅமரசிங்க அவர் மினுவாங்கொட மருத்துவமனையில் கொரோனா வோட்டினை உருவாக்குவதுடன் நின்றுவிடாமல் அந்த வோட்டின் நோயாளிகளை தாய்போல கவனித்தார்.

அவர் தனது 56வயதில் சமீபத்தில் கொரோனாவிற்கு பலியானார். அவர் மூன்று தசாப்தகாலமாக மருத்துவ தாதியாக பணியாற்றியவர்,இரண்டு பிள்ளைகளின் தாயான அவர் தனது இரண்டு பிள்ளைகளின் தாயாக மாத்திரமன்றி பல பிள்ளைகளின் அன்புதாயாக காணப்பட்டார்.

கொரோனா பரவ ஆரம்பித்ததும் அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்பது இல்லாமல் போனது, அவர் தனது முழு நேரத்தையும் கொரோனா நோயாளிகளிற்காக செலவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *