செப்டெம்பர் 30 வரை சர்வதேச விமானங்களுக்கு தடை!

கடந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பரவத் தொடங்கியது. இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் 23ம் திகதி முதல் இந்தியாவில் இருந்து செல்வதற்கும், இந்தியாவிற்குள் வருவதற்குமான சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்த தடை ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வதேச விமானங்கள் இந்தியா வருவதற்கும், இங்கிருந்து செல்வதற்குமான தடை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து பொது இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வருகிற செப்டம்பர் 30ஆம் திகதி வரை சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சர்வதேச சரக்கு விமானங்கள், விமானப் போக்குவரத்துக்கு பொது இயக்குனரகத்தால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது,’ என கூறப்பட்டுள்ளது….