முன்னாள் ஜனாதிபதியின் மெய்ப்பாதுகாவலர் மற்றும் மகன் கொரோனாவால் உயிரிழப்பு ஜனாஸா ஓட்டமாவடியில் நல்லடக்கம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் மெய்ப்பாதுகாவலர் மற்றும் அவரது மகன் ஆகியோரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் சிரேஷ்ட மெய்ப்பாதுகாப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஹமீத் இப்ராஹிம் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இறக்கும் போது அவருக்கு 78 வயது. இவர் கொழும்பு சாஹரா கல்லூரி ஆளுநர் சபை தலைவராக இருந்துள்ளதுடன் இலங்கை ரக்பி அணியின் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்துள்ளார்.

அதேவேளை நேற்றைய தினம் அவரது மகன் சுல்பிக் ஹமீத் கொரோனா தொற்றுக்குள்ளாகி காலமாகியுள்ளார்.இறக்கும்போது அவருக்கு 41வயது.

இந்நிலையில் அவர்கள் இருவரதும் ஜனாஸா ஒட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *