இவ்வருட இறுதிக்குள் கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 53 இலட்சத்தை தாண்டும்!

சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் கணிப்புகளின் படி, 2021 டிசம்பரில் உலகின் கோவிட் இறப்புக்களின் எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாறுபாடு காரணமாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய இறப்பைக் காட்டிலும் டிசம்பரில் ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிகப்படியான இறப்புகள் உலகில் நிகழும் என்றும் அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஆகஸ்ட் 6 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் ஆரம்பத்தில், உலகில் கோவிட் வைரஸ் தொடர்பான இறப்புகள் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கிறது.பின்னர் படிப்படியாக குறையும் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, தொற்றுநோய் ஆரம்பித்ததில் இருந்து உலகளவில் கோவிட் தொற்றால் சுமார் 43 லட்சம் இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

டெல்டா மாறுபாடு, சின்னம்மை போன்று எளிதில் பரவும் என்பதால், ஆரம்ப கோவிட் தொற்றுடன் ஒப்பிடும் போது 1,200 மடங்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளும், 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அந்த நாட்டில் தோன்றிய அல்பா மாறுபாட்டைக் காட்டிலும், இந்தியாவில் தோன்றிய டெல்டா மாறுபாடு தடுப்பூசிகளுக்கு சவாலானது என்பதை நிரூபித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *