அரசாங்கத்திடம் பணம் இல்லை அம்பலப்படுத்திய அமைச்சர்!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கேட்கின்ற சம்பளப் பிரச்சினைத் தீர்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அளவுக்கு அரசாங்கத்திடம் தற்சமயம் பணம் இல்லையென தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் கூறினார்.

ஆசிரியர்கள், அதிபர்களுக்கான சம்பளப் பிரச்சினையை தீர்க்க 56 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், ஆனால் தற்சமயம் அரசாங்கத்திடம் அவ்வளவு பணம் இல்லை எனவும் கூறிய அவர், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *