தங்கத்தின் விலை இனி எப்படி இருக்கும்?

தங்கத்தின் விலை நிலவரம் இனி எப்படி இருக்கும்?
தங்கத்தின் விலை நிலவரம், சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஆரம்பத்தில் சற்று குறைவது போன்று தோன்றினாலும், தொடர்ந்து ஏற்றத்தினையே கண்டது.

கடந்த திங்கட்கிழமையன்று 1786.50. டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்ச விலையாக 1784.75 டாலர்காள் வரையில் சென்றது.

இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். எனினும் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 1819.50 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும்.

இதனையடுத்து வெள்ளிக்கிழமையன்று முடிவில் 1808.55 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது. இது வரும் வாரத்திலும் அதிகரிக்கலாம் என்பது போலவே இருப்பதால், நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

தங்கம் விலையானது ஏற்றம் கண்டாலும், வெள்ளியின் விலையானது கடந்த வாரத்தில் சரிவினையே கண்டது.

கடந்த திங்கட்கிழமையன்று 26.698 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 26.910 டாலர்கள் வரையிலும் சென்றது.

எனினும் வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 25.820 டாலர்களை தொட்டது. முடிவில் 26.188 டாலர்களையும் தொட்டது. வெள்ளியின் விலை நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமில்லாமல் ஒரு rangebound ஆகவே வர்த்தகமாகி வந்தது.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் எல்லா ரெசிஸ்டன்ஸ் லெவல்களையும் உடைத்துக் காட்டியுள்ளது. குறிப்பாக நிபுணர்களின் கணிப்பினை போல 1800 டாலர்களையும் உடைத்தது.

கடந்த வெள்ளிக்கிழமை அமர்வில் முடிவு விலையும் அதற்கு மேலாகவே முடிந்துள்ளது. ஆக இனி அடுத்தடுத்து வரும் அமர்வுகளில் தங்கத்தின் விலை நிலவரம் அதாவது தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *