கொரோனா காலகட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள்!

இந்தியாவில் கொரோனா காலக்கட்டத்தில் 100 இற்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.

அது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘தமிழகத்தில் கொரோனாவினால் 93 குழந்தைகள் தாய்-தந்தை இருவரையும் இழந்துள்ளனர். அதேநேரம் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 593 ஆக காணப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ,குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *