மலேரியாவை முற்றிலும் ஒழித்து சீனா சாதனை!
மலேரியா காய்ச்சல் என்ற தீங்கை முற்றிலும் சீனா ஒழித்து சாதனை படைத்துள்ளது. சீனாவின் 70 ஆண்டுகால போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) இதைப் பாராட்டியுள்ளது.
1940 ஆம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 3 கோடி பேர் மலேரியாக் காய்ச்சலுக்கு அங்கு ஆளாகினர், ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு மலேரியா காய்ச்சல் கேஸ் கூட இல்லாமல் சீனா சாதித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறும்போது, “மலேரியா நோயிலிருந்து மீண்ட சீன மக்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.