பறக்கும் கார் வெற்றிகரமாக பறந்தது!

பறக்கக்கூடிய ஒரு சிறிய கார் (Flying car) ஐரோப்பாவில் உள்ள ஸ்லோவாக்கியாவில் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக பறந்து பயணித்துள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களின்படி, இந்த கார் நைட்ரா (Nitra) மற்றும் பிராட்டிஸ்லாவா (Bratislava) சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையே 35 நிமிடங்கள் பறந்தது.

இது hybrid car-aircraft, என்றும் அதன் இயந்திரம் பி.எம்.டபிள்யூ (BMW engine) வகை பயன்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் பெற்ரோல் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன் நிறுவனர் பேராசிரியர் ஸ்டீபன் க்ளீன் (Prof Stefan Klein), இந்த கார் சுமார் 8,200 அடி [2,500 மீ] உயரத்தில் 1,000km (600 miles) வரை பயணிக்க முடியும் என்று கூறினார். இது காற்றில் மணிக்கு 170 கிமீ வேகத்தில் பயணித்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இது இரண்டு நபர்களை சுமந்து பயணிக்கும், மொத்த நிறை எல்லை 200 கிலோ 200kg (31 stone). கார் விமானமாக பறக்க 2 நிமிடங்கள் 15 வினாடிகள் ஆகும் என பேராசிரியர் ஸ்டீபன் க்ளீன் தெரிவித்தார்.

மேலும் பறப்பதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *