டிரோன்களை வீழ்த்தும் தொழிநுட்பம் கண்டுபிடிப்பு!

டிரோன்களை கண்டுப்பிடித்து வீழ்த்தக்கூடிய புதிய தொழிநுட்பத்தை கண்டுப்பிடித்திருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான டிஆர்டிஓ (DRDO) தெரிவித்துள்ளது.

அது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி, டிரோன் எதிர்ப்புத் தொழிநுட்பம் மூலம் நாட்டின் பாதுகாப்புக் அச்சுறுத்தலாக விளங்கும் சிறிய டிரோன்களை அழிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

புதிதாக வான் மூலம் உருவான அச்சுறுத்தலை எதிர்கொள்ள இராணுவத்திற்கு இது ஆற்றலை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ,இந்த தொழிநுட்பத்தில் உள்ள சென்சர் கருவிகள், ரேடியோ அலைவரிசை போன்றவையும் மிகச் சிறிய வடிவிலான டிரோன்களையும் கண்டுபிடிக்க உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *