கொரோனா பாதிப்பு 18 கோடியை தாண்டியது!

உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை நிறைவில் 18 கோடியைத் தாண்டியது.

இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் இணையதளப் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 90,998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, சா்வதேச அளவில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 180,342,356 ஆக உயா்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடா்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு 34,448,876 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய் பாதிப்பால் அங்கு இதுவரை 618,286 போ் உயிரிழந்தனா். இதன் மூலம், கொரோனா பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 30,082,169 ஆக உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் பிரேஸில் (18,170,778) பிரான்ஸ் (5,762,322), துருக்கி (5,387,545), ரஷ்யா (5,368,513) ஆகிய நாடுகள் உள்ளன.

இதுதவிர, பிரிட்டன், ஆா்ஜெண்டீனா, இத்தாலி ஆகிய நாடுகளில் தலா 40 லட்சத்துக்கும் மேலானவா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 3,906,638 பலியாகியுள்ளனா். 165,067,595 கொரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா். 11,368,123 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 81,479 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *