இன்றிரவு முதல் மீண்டும் நாடு முடங்குகின்றது!

நாடு முழுவதும் கடந்த 21ம் திகதி தளர்த்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு, இன்றிரவு முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

அதன்படி ,இன்றிரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்படுகின்ற பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படவுள்ளதாக அவர் கூறுகின்றார்.

25ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இதற்கமைய , மேல் மாகாணத்தில் இயங்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்காக ஊழியர்களை பணிக்கு அழைப்பதானது, நிறுவனத்தின் பிரதானியின் அத்தியாவசிய தேவைகளின் பிரகாரம் என இறுதியாக வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டியில் கூறப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்கள், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் தமது கடமைகளை முன்னெடுக்க முடியும் என்பதுடன், ஏனையோரை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை , தமது நெருங்கிய உறவினர்களின் மரண வீடுகளுக்கு மாத்திரம், மாகாண எல்லையை பொது மக்களினால் கடக்க அனுமதி வழங்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சோதனை சாவடிகளில், அதற்கான ஆவணங்களை காண்பித்து, மாகாண எல்லைகளை கடக்க அனுமதி வழங்கப்படும் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மேலும் அதைவிடுத்து, வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் மாகாண எல்லையை கடக்க அனுமதி வழங்கப்படாது என பொலிஸார் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *