ரொனால்டோவால் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டத்தை இழந்த கொகா கோலா!

பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒரு சிறிய செய்கையால் கோகோ – கோலா குளிர்பானத்தில் பங்குகள் பல ஆயிரம் கோடி ரூபாய் சரிந்திருக்கிறது. கோகோ – கோலா நிறுவனம் யூரோ கால்பந்து போட்டியின் அதிகாரபூர்வ விளம்பரதார நிறுவனமாகும். இந்நிலையில் யூரோ போட்டி கால்பந்து தொடரில் நேற்று போர்ச்சுகல் அணியும், ஹங்கேரி அணியும் மோதினர். 

அதற்கு முன்னர் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது அப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ முன்பாக இரண்டு கொகா கோலா குளிர்சாதன போதல்கள் வைக்கப்பட்டிருந்தன

அவற்றை எடுத்து மாற்றி வைத்த ரொனால்டோ அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து தண்ணீரை குடியுங்கள் என்றார்.ரொனால்டோவின் இந்த ஒரு செய்கையால் ஐரோப்பிய பங்குசந்தையில் கொகா கோலாவிற்கு பாரிய நஷ்டத்தை உருவாக்கியுள்ளது.

மாலை 3 மணிக்கு வர்த்தகம் தொடங்கியபோது கொகா கோலாவின் பங்குகளின் மதிப்பு 242 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
ரொனால்டோவின் ஒரு சாதாரண செயலால் ஒரு சில நிமிடங்களில் 4 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பை சந்தித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *