கண்ணுக்கு தெரியாத சிற்பம் 18300 டொலருக்கு ஏலத்தில் விற்பனை!

67 வயதான இத்தாலிய கலைஞரான சால்வடோர் கராவ் என்பவர், எப்போதும் காணமுடியாத “உடல் அற்ற சிற்பத்தை” 18,300 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்றுள்ளார்.

அந்த சிற்பம் எதை வைத்தும் செய்யப்படாதது தான் அதன் அம்சம். அதாவது கண்ணுக்கே தெரியாத சிற்பம் என்று வெறும் வெற்றிடத்தை ஏலத்தில் விற்றுள்ளார். அதாவது இந்திய மதிப்புப்படி 13 லட்சத்திற்கு விற்றுள்ளார். ஏலத்தில், லோ சோனோ அதாவது “இது நான்” என்ற தலைப்பில், அந்த கண்னுக்கு தெரியாத சிற்பம் அதன் ஒன்றுமில்லாத முக்கியத்துவத்தைக் எடுத்துக்காட்டியுள்ளது.

இதுகுறித்து கலைஞர் கராவ் ஸ்பானிஷ், “வெற்றிடம் என்பது ஆற்றல் நிறைந்த ஒரு இடத்தைத் தவிர வேறொன்றுமில்லை. நாம் அதை காலி செய்தாலும், எதுவும் மிச்சமில்லை என்றாலும் ஆற்றல் மற்றும் நிறைந்திருக்கும். ஹைசன்பெர்க் நிச்சயமற்ற கொள்கையின்படி, எதற்கும் எடை இல்லை. ஆகையால். அது ஆற்றலைக் கொண்டுள்ளது. அது மின்தேக்கி துகள்களாக மாற்றப்படுகிறது. அதாவது அது நமக்குள் உள்ளது, ”என்று அவர் மேற்கோள் காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *