இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக ரோஹித் சர்மா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான கிரண் மோரே அளித்துள்ள பேட்டி: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒவ்வொரு கேப்டன் என்ற அணுகுமுறையை நோக்கி நகர்வதாக நான் நினைக்கிறேன். ரோகித் ஷர்மாவுக்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். கோஹ்லி, டோனி தலைமையில் விளையாடிய ஒரு புத்திசாலி கேப்டன். அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு இன்னும் எவ்வளவு காலம் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது குறித்து சிந்திப்பார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இந்த முடிவுகளைப் பற்றி நீங்கள் அதிகம் விவாதிப்பீர்கள்.

இந்திய அணியின் எதிர்காலம் குறித்து சீனியர் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. விராட் கோஹ்லி, மூன்று வடிவ இந்திய அணிக்கும் கேப்டனாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர் சிறப்பாகவும் விளையாட வேண்டும். அது அவ்வளவு எளிதானது அல்ல. எனினும், கேப்டனாகவும், தனி வீரராகவும் அவர் வெற்றி பெறுகிறார் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால்,ஒரு நாள், இது போதும், ரோகித் ஷர்மா அணியை வழி நடத்தட்டும் என்று சொல்லும் ஒரு காலம் வரும் என்று நான் நினைக்கிறேன். ரிஷப் பன்ட்டை அணியின் எதிர்கால கேப்டனாக தான் பார்க்கிறேன். இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான அவர் அணியை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடியவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *